< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
|18 July 2022 9:23 PM IST
டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் ராமு தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் திருச்செல்வம், துணை பொதுச்செயலாளர்கள் ராமு, ஜான்பிரான்சிஸ், வேல்முருகன், பொருளாளர் சதீஷ்குமார், மாநில குழு உறுப்பினர் கோபால், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.