< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லி அருகே டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பூந்தமல்லி அருகே டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தினத்தந்தி
|
18 March 2023 1:46 PM IST

பூந்தமல்லி அருகே டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை முதல் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது. போராட்டத்தில் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் குடும்ப நல நிதியை அரசு மற்ற துறைகளில் உயர்த்தி வழங்குவது போல் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டியும், டாஸ்மாக் பணியாளர்களின் மருத்துவ செலவு தொகையை அஸ்பத்திரியிலேயே நேரடியாக செலுத்த வலியுறுத்தியும், டாஸ்மாக் விற்பனை பணியாளர்களுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தின் போது இந்த பகுதியில் கனமழை பெய்தது மழையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்