ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.12 கோடிக்கு மதுவிற்பனை
|தீபாவளி பண்டிகையையொட்டி ராமநாதபுரம் மாவட் டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 3 நாட்களில் ரூ.12 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ராமநாதபுரம் மாவட் டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 3 நாட்களில் ரூ.12 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.
மதுவிற்பனை
தீபாவளி பண்டிகை சமயத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனை அதிகஅளவில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கம்போல தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் அதிகஅளவில் மதுவிற்பனையாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த 22-ந் தேதி ரூ.2.84 கோடிக்கும், 23-ந் தேதி ரூ.4.42 கோடிக்கும், 24-ந் தேதி தீபாவளி அன்று ரூ.4.75 கோடிக்கும் என மொத்தம் 3 நாட்களில் ரூ.12 கோடியே 1 லட்சத்திற்கு மதுவிற்பனையாகி உள்ளது.
இவ்வாறு கடந்த 22-ந் தேதி 3 ஆயிரத்து 637 மதுபாட்டில் பெட்டிகளும், ஆயிரத்து 730 பாட்டில் பெட்டிகளும், 23-ந் தேதி 5ஆயிரத்து 472 மதுபாட்டில் பெட்டிகளும், 2 ஆயிரத்து 750 பீர்பாட்டில் பெட்டிகளும், 24-ந் தேதி தீபாவளி அன்று 5 ஆயிரத்து 298 மதுபாட்டில் பெட்டிகளும், 4 ஆயிரத்து 893 பீர் பாட்டில் பெட்டிகளும் விற்பனையாகி உள்ளது.
ரூ.12 கோடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் ரூ.12 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2-ந் தேதி ரூ.2.10 கோடிக்கும், 3-ந் தேதி ரூ.3.12 கோடிக்கும், 4-ந் தேதி ரூ. 4.43 கோடிக்கும் என மொத்தம் ரூ.9.65 கோடிக்கு மதுவிற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு ரூ.12 கோடிக்கு விற்பனையாகி உள்ளதால் கடந்தை ஆண்டைவிட ரூ.2.35 கோடி இந்த ஆண்டு அதிகம் விற்பனையாகி உள்ளது.