< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
|17 Aug 2023 5:54 PM IST
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருவள்ளூரில் பிரசித்திப்பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபடுவது வழக்கம். நேற்று அமாவாசை தினத்தையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதால், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து நோய்கள் தீர்க்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.