< Back
மாநில செய்திகள்
டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
திருப்பூர்
மாநில செய்திகள்

டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 Jun 2023 8:23 PM IST

டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காங்கயம், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). இவர் மினி பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கும் பக்கத்துக்கு வீட்டில் வசித்து வரும் குமார் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் குமாரின் மகன் மனிஷ் என்கிற மணிகண்டன் (24), லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லோகநாதன் காங்கயம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மனிஷ் என்கிற மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்