ராமநாதபுரம்
2¼ லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு
|2¼ லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட 35 கிராம ஊராட்சிகளில் மாவட்ட பசுமை திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் கலெக்டர் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் 22,4000 மரக்கன்றுகள் நட ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக பாரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரனூர் கிராமத்தில் உள்ள மண்புழு உரக்கொட்டகையில் மரக்கன்றுகளுக்கான விதை உரங்களுடன் பாலித்தீன் பாக்கெட்டில் போடப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மலைராஜன் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி கூட்டமைப்புத்தலைவர் பிச்சங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் நாகமுத்து, பாரனுார் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர்கள் ரவி, அருள் முடியப்பதாஸ் மற்றும் பணித்தள பொறுப்பாளர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.