< Back
மாநில செய்திகள்
வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
கரூர்
மாநில செய்திகள்

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

தினத்தந்தி
|
31 Dec 2022 1:02 AM IST

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்தது. டன் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

நொய்யல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். தற்போது டன் ஒன்றுக்கு ரூ.9,500-க்கு விற்பனையாகிறது. அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ஒரு டன் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கு வரத்து குறைவாலும், ஜவ்வரிசி விலை அதிகரித்துள்ளதாலும் மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்