< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்; பெண் சாவு - கணவர் கண் எதிரே பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்; பெண் சாவு - கணவர் கண் எதிரே பரிதாபம்

தினத்தந்தி
|
15 Jun 2022 12:04 PM IST

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி மாலா (வயது 47). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாதவரம் ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தபோது கும்மிடிபூண்டியில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனோகரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்