< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
தடுப்புச்சுவரில் டேங்கர் லாரி மோதி விபத்து...!
|18 Jun 2023 1:34 AM IST
மேச்சேரி பஸ் நிலையம் அருகே தடுப்புச்சுவரில் டேங்கர் லாரி மோதி விபத்து
மேச்சேரி
மேச்சேரி பஸ் நிலையம் அருகே குறுகிய சாலையின நடுவே தடுப்புச்சுவர் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு ஸ்பிரிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி இந்த தடுப்புச்சுவரில் மோதி இரவு வரை நின்று கொண்டு உள்ளது. இதையடுத்து காலையில் இருந்து போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனமும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காலையில் இருந்து மேச்சேரி பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இப்பகுதியில் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த தடுப்புச்சுவரை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.