< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் பஜாரில் கடைக்குள் புகுந்த டேங்கர் லாரி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் பஜாரில் கடைக்குள் புகுந்த டேங்கர் லாரி

தினத்தந்தி
|
16 Jun 2022 11:48 AM IST

மீஞ்சூர் பஜாரில் டேங்கர் லாரி கடைக்குள் புகுந்தது.

மீஞ்சூர் பஜாரின் இருபுறங்களிலும் கடைகள் செயல்படுவதுடன் சாலையில் சிறு வியாபாரிகள் கடை அமைத்து பூ, பழங்கள், காய்கறி உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை வயதான ஒருவர் சாலையை கடக்கும்போது டேங்கர் லாரி வேகமாக வந்து கொண்டிருந்த நிலையில் வயதானவர்கள் மீது மோதாமல் இருக்க லேசாக திரும்பியபோது டேங்கர் லாரி இறைச்சி கடைக்குள் புகுந்தது.

இதில் கடையில் இருந்த தொழிலாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் சாலையில் நின்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட இந்த விபத்தில் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்