< Back
மாநில செய்திகள்
டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று வேலைநிறுத்தம் - பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஏற்பாடு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று வேலைநிறுத்தம் - பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஏற்பாடு

தினத்தந்தி
|
10 July 2024 11:23 AM IST

இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை,

இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக கூறி சென்னை பகுதியில் இயங்கும் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று (புதன்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

அதேவேளையில், வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி பெட்ரோல், டீசல் வினியோகம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (பெருநிறுவன தொடர்பு) வெற்றி செல்வக்குமார் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்தியன் ஆயில் டீலருக்கு சொந்தமான டேங்கர் லாரிகள் மூலம் வழக்கம்போல் பெட்ரோல், டீசல் வினியோகம் நடைபெறும்.

இந்தியன் ஆயில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சேவை செய்ய உறுதி பூண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நிலைமையைச் சமாளிப்பதற்கும் தடையற்ற எரிபொருள் வினியோகத்தை உறுதி செய்யவும் இந்தியன் ஆயில் குழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்