< Back
மாநில செய்திகள்
தஞ்சை: சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..! 40 பேர் படுகாயம்
மாநில செய்திகள்

தஞ்சை: சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..! 40 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
2 April 2023 6:53 AM IST

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒக்கநாடு கீழையூரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த லில்லி (வயது63) மற்றும் ரியான் (வயது9) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்

மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்