< Back
மாநில செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலை சுற்றி வந்த ட்ரோன் கேமிரா - 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
மாநில செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலை சுற்றி வந்த ட்ரோன் கேமிரா - 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
24 Sept 2022 3:57 PM IST

பிரதோஷ வழிபாட்டின் போது, பெரிய கோவிலின் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளை ட்ரோன் கேமிரா ஒன்று படம்பிடித்தவாறு சுற்றி வந்தது.

தஞ்சாவூர்,

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை ட்ரோன் கேமிரா மூலம் படம்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தஞ்சை கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ட்ரோன் கேமிரா ஒன்று பெரிய கோவிலின் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளை படம்பிடித்தவாறு சுற்றி வந்தது.

அந்த ட்ரோன் கேமிராவை கல்லணை கால்வாயில் இருந்து 2 பேர் பறக்கவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 நபர்களையும் கைது செய்து ட்ரோன் கேமிராவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்