< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம். கோலாட்டம் ஆடிய மாநகர மேயர், ஆணையர் - வைரலாகும் வீடியோ
|2 May 2023 12:12 AM IST
தஞ்சை பெரிய கோயில் தேரோட்ட விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயரும், ஆணையரும் கோலாட்டம் ஆடினார்கள்.
தஞ்சை,
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்ட விழாவில், பக்தர்களின் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்றபோது, நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடி சென்றனர்.
அதில், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகிய இருவரும் கோலாட்டம் ஆடினார்கள். அவர்கள் கோலாட்டம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.