< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தஞ்சை இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் மீது குண்டாஸ்
|12 Sept 2024 8:48 PM IST
தஞ்சாவூரில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியில் கடந்த மாதம் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் அளித்த பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.