விருதுநகர்
செட்டியார்பட்டியில் தாமிரபரணி குடிநீர் தேக்க தொட்டி
|செட்டியார்பட்டியில் தாமிரபரணி குடிநீர் தேக்க தொட்டி திறக்கப்பட்டது.
ராஜபாளையம்,
செட்டியார்பட்டி பேரூராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 13-வது வார்டு, பாலவிநாயகர் கோவில் தெரு, 9-வது வார்டு சேத்தூரிலிருந்து தளவாய்புரம் செல்லும் மெயின் சாலை ஆகிய பகுதிகளில் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தங்கப்பாண்டியன் எம். எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. விரைவில் அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
இதில் செட்டியார்பட்டி பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், செயல் அலுவலர் சந்திரகலா, பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், துணை சேர்மன் விநாயகமூர்த்தி, கவுன்சிலர்கள் மணிகண்டன், மாம்பழக்கனி, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.