< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புலன் விசாரணையில் தமிழ்நாடு காவல்துறை முதலிடம் - டிஜிபி சைலேந்திர பாபு
|19 March 2023 10:05 PM IST
புலன் விசாரணையில் தமிழ்நாடு காவல்துறை முதலிடத்தில் உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காவல்துறை புலன் விசாரணையில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளதாக தமிழக டிஜிபி டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து உள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ராஜபாளையம் 11வது பட்டாலியனை ஆய்வுசெய்த பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் , வருகிற மே மாதம் 600 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 ஆயிரத்து 600 காவலர்கள் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர் என்று கூறியுள்ள டிஜிபி சைலேந்திர பாபு, போக்சோ குற்றங்களை முழுமையாக தடுப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.