< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால்... தமிழக அரசு எச்சரிக்கை
|6 Nov 2023 9:49 PM IST
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால்... தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை,
பிற மாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறு பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளள்து. மறுபதிவு செய்ய டிச.16 வரை அவகாசம் தர ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
மேலும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள் டிச.16 க்கு பிறகு தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதேபோல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.