< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது..!
|9 Oct 2023 6:57 AM IST
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சட்டசபைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.