தமிழிசை சவுந்தரராஜன், கவர்னர் வேலையை மட்டும் பார்த்தால் போதும்: அமைச்சர் சேகர்பாபு பதிலடி
|மழை, வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்திருந்தார்.
சென்னை,
புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தென் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை, வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளவில்லை என விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;
"தமிழிசை சவுந்தரராஜனை முதலில் கவர்னர் வேலையை பார்க்கச்சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம் என கூறுங்கள். தமிழகத்தில் எங்கேயாவது நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வேண்டும் என்பது அவரின் எதிர்கால திட்டமாக உள்ளது. அவர் எங்கே போட்டியிட்டாலும், தமிழக மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக தருவார்கள். எனவே புதுச்சேரி கவர்னர், அந்த பொறுப்பிற்கான பணிகளை மேற்கொள்வது நல்லது." என்று கூறினார்.