தமிழக வெற்றிக் கழக கொடி - விஜய் மீது புகார்
|தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.
அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.
முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.