< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|17 July 2022 11:19 PM IST
வேடசந்தூரில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வேடசந்தூர் தொகுதி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அறிவரசன், ஒன்றிய செயலாளர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், மாவட்ட செயலாளர் திருவாணன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.