< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"தமிழ்நாடு எட்ட வேண்டிய உயரம் இமயமலைக்கு இணையானது" - அன்புமணி ராமதாஸ்
|16 July 2022 10:46 AM IST
தமிழ்நாடு எட்ட வேண்டிய உயரம் இமயமலைக்கு இணையானது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது தொடக்க விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பாட்டாளி மக்கள் கட்சி 34-ஆவது தொடக்க விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் கட்சியின் வளர்ச்சிக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி உழைத்து வரும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்!
தமிழ்நாடு எட்ட வேண்டிய உயரம் இமயமலைக்கு இணையானது. ஆனால், அதற்குரிய திறனில் பாதியைக் கூட எட்ட முடியவில்லை. அதற்கான தடைகளை களைந்து தமிழ்நாட்டை அதற்குரிய உயரத்திற்கு முன்னேற்ற வேண்டிய நமது கடமை. அதற்கான பொறுப்பை அடைவதற்காக உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்!." என்று அதில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.