தூத்துக்குடி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டம்
|முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரோபி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் ராஸிக் முஸம்மில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெரினா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரோ ஆகாஷ் தினகரன்,
மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகிற 17-ந் தேதி மாலை 5 மணி அளவில் கனிம வள கொள்ளைக்கு எதிராக நாகர்கோவிலில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் நமது மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் நிர்வாகிகளை அழைத்துச் செல்வது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மணிப்பூர் மாநிலத்தில் நிலவிவரும் கலவரத்திற்கு அந்த மாநில பி.ஜே.பி. அரசு பொறுப்பேற்று மாநில முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும், தாமிரபரணி ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீரை சுத்தரிகரித்து பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.