< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
|6 April 2023 7:14 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது
சென்னை.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 வகுப்புக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது.
இந்த பொதுத்தேர்வினை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். 12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வில் தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் ஆப்சென்ட் இல்லாமல் முழு அளவில் மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.