திருநெல்வேலி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ரத்ததானம்
|பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ரத்ததானம் வழங்கினர்.
1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு நடந்த அமைதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தால் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிகழ்வின் 24-வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மனித உயிர்களை காக்கும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ரத்ததானம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் பலர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டி, இளைஞர் அணி தலைவர் மணிமாறன், மேலப்பாளையம் பகுதி தலைவர் டிக்முத்து, இணை செயலாளர் முருகேஷ், இளைஞர் அணி பகுதி செயலாளர் உலகநாதன் மற்றும் சிந்து, பேராச்சி, காட்டு ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.