திருவண்ணாமலை
சாதி சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்
|தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கத்தினர் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கத்தினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சம்பத் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பன்னியாண்டி மக்களின் பட்டியலின எஸ்.சி. பன்னியாண்டி சான்றிதழ் கேட்டு பலமுறை முறையிட்டும், மனு கொடுத்தும் இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்தினால் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.