கூடலூரில் வெள்ளம் பாதித்த இடங்களை தமிழக அமைச்சர்கள் குழு பார்வையிட்டனர்
|கூடலூரில் வெள்ளம் பாதித்த இடங்களை தமிழக அமைச்சர்கள் குழு பார்வையிட்டனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி தமிழக பேரிடர் தடுப்பு மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் கூடலூர் மங்குலியில் ஆற்றில் பாலம் உடைந்த இடத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டனர். பின்னர் பாலம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு உறுதி அளித்தனர்.