< Back
மாநில செய்திகள்
காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மரியாதை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மரியாதை

தினத்தந்தி
|
17 July 2023 1:33 AM IST

நெல்லையில் காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவச்சிலைக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், மாவட்ட துணை தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் பகவதி ராஜன், நயினார், சிந்துபூந்துறை வியாபாரிகள் சங்க தலைவர் ஆஞ்சிஸ், மாவட்ட தொகுதி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, நெல்லை மாநகர் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்