< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சில்லறை வணிகம், விவசாயம், சிறுதொழில் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்: நிர்வாகம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சில்லறை வணிகம், விவசாயம், சிறுதொழில் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்: நிர்வாகம்

தினத்தந்தி
|
16 Sep 2022 6:45 PM GMT

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சில்லறை வணிகம், விவசாயம், சிறுதொழில் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சில்லறை வணிகம், விவசாயம், சிறுதொழில் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முக்கியத்துவம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை கடன்கள் வழங்கவும், கிளைகள், இணையவழி விரிவாக்கத்திலும் முக்கியத்துவம் அளிக்க உள்ளது. இந்த துறைகளில் வங்கியின் கடன்களின் பங்களிப்பு 88 சதவீதமாக உள்ளது. வங்கியின் மொத்த வணிகத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 75 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு 85.03 சதவீதத்துக்கு மேல் உள்ளது. தமிழ்நாடு போன்ற அதிக கிளைகளை கொண்டுள்ள மாநிலங்களில் இந்த வங்கிக்கு வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ. துறை கடன்களை இந்த வங்கி மிகவும் சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 15.21 சதவீதத்துக்கு மேல் இந்த பிரிவில் வளர்ச்சி கண்டு உள்ளது. 2022 மார்ச் மாதம் நிலவரப்படி வங்கியின் மொத்த டெபாசிட்டுகள் ரூ,44 ஆயிரத்து 930 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன்கள் ரூ.33 ஆயிரத்து 490 கோடியாகவும் உள்ளது.

பங்குசந்தை

இந்த வங்கிக்கு தமிழகத்தில் 369 கிளைகள் உள்ளன. 949 ஏ.டி.எம். மையங்கள், 255 பணம் மறுசுழற்சி எந்திரங்கள், 91 இ-லாபிகள், 3 ஆயிரத்து 939 பாயிண்ட் ஆப் சர்வீஸ் உள்ளன. முன்னுரிமை கடன்கள் வழங்குவதற்காக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறிய வாடிக்கையாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. கார் கடன்கள், தனிநபர் கடன்களை அதிக அளவில் வழங்க திட்டமிட்டு உள்ளது. வீட்டுக்கடன் வழங்குவதையும் துரிதப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

டி.எம்.பி. கட்டண அடிப்படையிலான வருமானத்தை அதிகரிக்க டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், பொதுக்காப்பீடு பாலிசிகள், ஆயுள்காப்பீடு பாலிசிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. புதிய கிளை, இணையவழி சேவைகள் மூலம் நிலையான வளர்ச்சி பெற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இதற்கான புதுமையான தொழில்நுட்ப வசதிக்காக முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகள் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் புதிய பங்கு வெளியீட்டுக்கு மொத்தம் 2.86 மடங்குகள் ஆதரவு கிடைத்து இருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்