< Back
மாநில செய்திகள்
சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை : தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு!
மாநில செய்திகள்

சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை : தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு!

தினத்தந்தி
|
7 Jun 2022 10:01 AM IST

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

சென்னை,

ஈரோட்டை சேர்ந்த பிரபல ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமியிடம் இருந்து சட்டவிரோதமாக கருமுட்டைகள் தானம் பெற்றதாக புகார் வந்தது. இந்த தகவல் ஈரோடு மருத்துவமனைகள் வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 16 வயது சிறுமியின் தாயார் உள்பட 4 பேர் இந்த விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரத்தில் புரோக்கர் மூலம் கருமுட்டை விற்பனை நடந்து இருப்பதால், பாதிக்கப்பட்டு இருப்பது இந்த சிறுமி ஒருவர்தானா, இன்னும் வேறு சிறுமிகள் இதுபோன்று கருமுட்டை விற்பனையில் தள்ளப்பட்டு இருக்கிறார்களா?. கரு முட்டைதானம் சட்டப்படியும், மருத்துவ சட்ட வழிமுறைகளின் படியும்தான் நடைபெறுகிறதா? இல்லை காசுக்காக சிறுமிகளின் கருவறைகள் மீண்டும் மீண்டும் காயப்படுத்தப்படுகின்றனவா? என்ற கோணத்தில் ஈரோடு மாவட்ட போலீசாரும், மருத்துவத்துறையினரும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும் செய்திகள்