< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
தமிழ்நாடு மருத்துவர் சங்க நிர்வாகிகள் நகராட்சி ஆணையரிடம் மனு
|24 Aug 2023 1:14 AM IST
தொழில் வரி செலுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் சங்க நிர்வாகிகள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் முடி திருத்தம் தொழிலாளர்களான நாங்கள் இதுநாள் வரையில் நகராட்சி நிர்வாகத்திற்கு தொழில் வரி செலுத்தியது இல்லை. கொரோனா காலத்தில் எங்களது தொழில் பாதிப்பு அடைந்துள்ளது. இன்னும் அதில் இருந்து மீள முடியவில்லை. எனவே, நாங்கள் தற்போது தொழில் வரி செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இதுகுறித்து சங்கத்தின் மாநில நிர்வாகிகள் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.