திருச்சி
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முசிறி கைகாட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராவணன் என்கிற ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலைவாணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் விஜயமோகன், மாவட்ட துணைதலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மதியுரைக்குழு உறுப்பினர் பாலகுருசாமி, மத்திய மண்டல பொருப்பாளர் தமிழரசன், மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா, திருச்சி வடக்கு மாவட்ட அமைப்பாளர் பிரணவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்ட உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தொடர் தற்கொலைகளை ஏற்படுத்துகின்ற ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் யுவராஜன் நன்றி கூறினார்.