பிப்ரவரி 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்..?
|தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை கவர்னர் முறையாக முடித்து வைக்கவில்லை. மேலும் கவர்னருக்கும் தமிழக அரசிற்கும் இடையே மோதல் போக்கு அதிகமாகியுள்ளது. எனவே இந்த கூட்டத்தொடர் கவர்னரின் உரையுடன் தொடங்கப்படுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.