< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை - எச்.ராஜா பேட்டி
|30 Nov 2022 12:57 AM IST
தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை என எச்.ராஜா கூறினார்.
மானாமதுரை,
மானாமதுரையில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கவர்னர் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் (தி.மு.க.) முடிவு பண்ண முடியாது. தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். அதற்கு காரணம் டாஸ்மாக்.
எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கையெழுத்தாக இருக்கும் என கனிமொழி சொன்னார். ஆனால் இப்போது இன்னும் 500 கடைகள் அதிகமாக திறந்திருக்கிறார்கள்.
பா.ஜ.க., தி.மு.க.வை வேரோடு கலைவதற்கான அனைத்து செயல்களையும் செய்யும். தமிழகத்தில் தினமும் கொலைகள், குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.