< Back
மாநில செய்திகள்
பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
மாநில செய்திகள்

'பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது' - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

தினத்தந்தி
|
25 Jun 2023 10:21 PM IST

இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

அரியலூர்,

தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அரியலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தொழில் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் தான் உள்ளனர்" என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.



மேலும் செய்திகள்