< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை உத்தரவு
|4 Oct 2022 11:19 AM IST
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருதரிப்பு மையங்கள், வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாயும், வாடகை தாய் மையத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பதிவு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம் எனவும், இதன் மூலம் போலி கருதரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.