< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்கு உள்ளது' - அமைச்சர் எ.வ.வேலு
|6 Aug 2023 10:59 PM IST
இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்குத் தான் உள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கருஞ்சட்டை விருது வழங்கும் விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கவிஞர் தஞ்சை கூத்தரசன், தோழர் மாறன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு கருஞ்சட்டை விருது வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. எழிலன், இயக்குனர் கரு.பழனியப்பன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "இந்தியா என்றால் ஏதோ வடக்கில் தூரத்தில் இருக்கும் ஊர் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையை மாற்றி, இன்று இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்குத் தான் உள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.