மின்கட்டண உயர்வு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
|மின்கட்டண உயர்வு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் ஆட்சி அமைத்த பிறகு அதை செய்யவில்லை. பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், கூட்டணியில் உள்ள புதுச்சேரியில் குறைத்துள்ளனர். தமிழகத்தில் ஏன் குறைக்க முடிய வில்லை என்பதே மக்களின் கேள்வி.
மின் கட்டணத்தை உயர்த்த, மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக கூறுவது பொய். உலகதத்தில் பொய் சொல்வதில் தி.மு.க. அமைச்சர்கள் தான் முதலிடம் பெறுவார்கள்.
மத்திய அரசு தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த சொல்ல வில்லை. தனியார் நிறுவனத்தை ஆதரிப்பதற்காக கட்டணத்தை மாநில அரசே உயர்த்தி உள்ளது. மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கியதால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றால், அதுதொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு, மக்கள் மத்தியில் கணக்குகளை காண்பிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.