< Back
மாநில செய்திகள்
காசிமேடு கடற்கரையை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியீடு
மாநில செய்திகள்

காசிமேடு கடற்கரையை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியீடு

தினத்தந்தி
|
22 Aug 2023 7:49 PM IST

காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் நடைபாதை, உடற்பயிற்சிக் கூடம், உணவு கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. அதே போல் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை பகுதி ஆயிரம் கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்