< Back
மாநில செய்திகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்கவேண்டும் - சசிகலா
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்கவேண்டும் - சசிகலா

தினத்தந்தி
|
2 Aug 2022 12:13 AM IST

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்கவேண்டும் என சசிகலா வளியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது,

தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு அறிவித்து, நிலுவை தொகையினை உடனே வழங்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

1-1-22 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு மார்ச் மாத இறுதியிலேயே வழங்கிவிட்டது. இந்தநிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வு பற்றி சிந்திக்கக் கூட மனமின்றி 4 மாதங்களாக தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது.

எனவே, தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில்கொண்டு 1-1-2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை முன்தேதியிட்டு அறிவித்து நிலுவை தொகையினை உடனே வழங்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்