< Back
மாநில செய்திகள்
மகிழ்ச்சி, ஆரோக்கியம், நல்லிணக்கம் கொண்டுவரட்டும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து
மாநில செய்திகள்

''மகிழ்ச்சி, ஆரோக்கியம், நல்லிணக்கம் கொண்டுவரட்டும்'' தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து

தினத்தந்தி
|
31 Dec 2022 6:11 PM IST

எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நமது தேசத்தின் அமுதகால பயணத்தில் உலக நாடுகளின் விஸ்வகுரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோர்ப்போம். உலகில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நம் நாடு 2023 புத்தாண்டில் நம்பிக்கையுடனும், அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது.

நமது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டுக்கு நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க உறுதியுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு நாம் விழிப்புடன் இருந்து கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். புத்தாண்டு 2023 நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியை கொண்டுவரட்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்