< Back
மாநில செய்திகள்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
மாநில செய்திகள்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

தினத்தந்தி
|
15 July 2024 7:51 PM IST

தனிப்பட்ட முறையில் கவர்னர் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 11.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். கவர்னருடன் அவருடைய மனைவி மற்றும் பேரனும் உடன் சென்றுள்ளனர்.

டெல்லிக்கு தனிப்பட்ட முறையில் கவர்னர் பயணம் மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. தனது பயணத்தை முடித்து கொண்டு வருகிற 19ம் தேதி கவர்னர் சென்னை திரும்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்