< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

19 Oct 2023 8:42 AM IST
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, உள்துறை மந்திரி அமித்ஷா, அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் டெல்லியில் இருப்பார் என்றும் அதன் பிறகு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.