< Back
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
18 Sept 2023 9:45 AM IST

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும்." இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்