< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குடியரசு தினவிழா பேரணியில் இடம்பெறும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி...!
|5 Jan 2024 9:47 PM IST
டெல்லி கடமைப் பாதையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
புது டெல்லி,
நாடு முழுவதும் 75-வது குடியரசு தினவிழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பேரணி நடைபெறும். டெல்லி கடமைப் பாதையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
இந்த முறை டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா பேரணியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிபடுத்தப்பட உள்ளது.