< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குடிநீர் மற்றும் பாசனத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு
|18 July 2023 8:42 PM IST
குடிநீர் மற்றும் பாசனத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்கள் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கும் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் 19-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை 105 நாட்கள் 3 ஆயிரத்து 15 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.