< Back
மாநில செய்திகள்
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
கடலூர்
மாநில செய்திகள்

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

தினத்தந்தி
|
13 Oct 2023 12:15 AM IST

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல், போராட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளது. அதேபோல் செவிலியர்கள் போராட்டத்தையும் அரசு தடுத்து உள்ளது. இந்த அணுகுமுறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட சங்க மாநில தலைவரை அரசு பணி நீக்கம் செய்தது. ஆனால் பேச்சுவார்த்தை மூலம் அவருக்கு பணி வழங்க உத்தரவிட்டும், டாஸ்மாக் நிர்வாகம் மறுத்து வருகிறது. டாஸ்மாக் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ரேஷன் கடையில் சரியான எடையில் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். பொதுவினியோகத்திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் சரவணன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்