< Back
மாநில செய்திகள்
கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
மாநில செய்திகள்

'கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தினத்தந்தி
|
29 Jun 2024 6:16 PM IST

கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

கள்ளுக்கடைகள் திறப்பதன் மூலம் ஏழை மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"ஏழை மக்கள் டாஸ்மாக் கடைகளில் மதுவின் விலை அதிகமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆகவே, கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை, எளிய மக்களை காப்பாற்ற முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. விவசாயிகளுக்கும் அது பலனளிக்கும். எனவே, கள்ளுக்கடைகளை திறப்பது சாத்தியமா என்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்."

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்