< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
|27 Jun 2023 8:30 PM IST
உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஆவடி காவல் ஆணையர் அருண் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகவும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஷங்கர், ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலன், ஏ.டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. உள்துறை செயலாளர் அமுதா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.